ஆன்மிகம்
திருத்தணி முருகன் கோவிலில் மாசி திருவிழா தொடக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் மாசி திருவிழா தொடக்கம்

Published On 2020-02-28 07:46 GMT   |   Update On 2020-02-28 07:46 GMT
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா இன்று மலைக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக மலைக் கோவிலில் நடைபெறும். இந்த ஆண்டு மாசித் திருவிழா இன்று (வெள்ளிக் கிழமை) மலைக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று இரவு 7 மணிக்கு முருகப்பெருமான் கேடய உலா உற்சவத்தில் எழுந் தருளி மலைக்கோவிலில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். நாளை (சனிக்கிழமை) காலை வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் முருகப் பெருமான் எழுந் தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் எழுந்தருளுவார்.

ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம், பல்லாக்கு சேவை, வெள்ளி நாக வாகனம், அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், புலி வாகனம், யானை வாகனம், யாளி வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முருகப்பெருமான் யாளி வாகனத்தில் எழுந்தருளி மாலை பாரிவேட்டைக்கு புறப்படுவார். நள்ளிரவு ஒரு மணிக்கு வள்ளியம்மை -முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற உள் ளது. இதில்  பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) மாலையுடன் மாசி திருவிழா நிறைவு பெறுகிறது.

மாசி திருவிழாவில் 12 நாட்களும்  சிறப்பு நிகழ்ச்சி மலைக்கோவில் முருகப் பெருமானுக்கு நடைபெறுகிறது. மூலவருக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது.

தற்கான ஏற்பாடுகளை கோவிலின் இணை ஆணையர், செயல் அலுவலர் பழனி குமார், கோவில் தக்கார் ஜெய்சங்கர், உதவி ஆணையர் ரமணி மற்றும் திருக்கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News