ஆன்மிகம்
விளக்கொளி பெருமாள்

விளக்கொளி பெருமாள்

Published On 2019-12-09 08:27 GMT   |   Update On 2019-12-09 08:27 GMT
கார்த்திகையன்று காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளி பெருமாள் கோவிலிலும் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கார்த்திகையன்று காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளி பெருமாள் கோவிலிலும் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பூமியில் தனக்கு கோவில் இல்லை என்பதால் பிரம்மன், சிவனை நோக்கி யாகம் நடத்தினார்.

அப்போது அவர் தன் மனைவி சரஸ்வதியை உடன் வைத்துக் கொள்ளவில்லை. இதனால் யாகம் முழுமை பெறவில்லை.

யாகத்துக்கு அழைக்காததால் கோபத்தில் இருந்த சரஸ்வதியை விஷ்ணு பகவான் சமாதானம் செய்தார். பிறகு விஷ்ணு ஜோதியாக மாறி நின்றார். இதனால் யாகம் தடையின்றி நடந்து முடிந்தது. எனவே காஞ்சீபுரம் பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. கார்த்திகை தினத்தில் இந்த பெருமாள் சன்னதியில் தீபம் ஏற்றி வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.
Tags:    

Similar News