ஆன்மிகம்
நெல்லையில் சுவாமி ஆறுமுக பெருமானுக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

ஆவணி திருவிழா: சுவாமி ஆறுமுக பெருமானுக்கு வைர கிரீடம் அணிவிப்பு

Published On 2019-09-10 05:53 GMT   |   Update On 2019-09-10 05:53 GMT
நெல்லை குறுக்குத்துறையில் சுவாமி ஆறுமுக பெருமானுக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் திளரான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

நேற்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆறுமுக பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் அவர் நெல்லை டவுனுக்கு புறப்பட்டு சென்றார். டவுன் திருப்பணி முக்கில் சுவாமிக்கு வைர கிரீடம் அணிவித்து தங்க வேல் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. டவுனில் 2 நாட்கள் தங்கி இருக்கும் சுவாமி, பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு சுவாமி முருகப்பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 13-ந் தேதி காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
Tags:    

Similar News