ஆன்மிகம்
கிருஷ்ணன்

கோவிந்தா என்று அழைப்பதற்கான காரணம்

Published On 2019-08-21 05:52 GMT   |   Update On 2019-08-21 05:52 GMT
வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்று பொருளாகும். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள்படும். கோவிந்தா, கோவிந்தா, என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
Tags:    

Similar News