ஆன்மிகம்
ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் சாமி தங்ககேடயத்தில் எழுந்தருளியபோது கோவில் யானை ராமலட்சுமி வணங்கிய காட்சி.

ராமேசுவரம் கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி

Published On 2019-06-11 06:21 GMT   |   Update On 2019-06-11 06:21 GMT
ராமேசுவரம் கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம் கோவிலின் தல வரலாற்றை விளக்கும் வகையில் 3 நாட்கள் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று மாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து லெட்சுமணர்,ஆஞ்சநேயர் ஆகியோருடன் ராமபிரான் தங்க கேடயத்தில் திட்டக்குடி சந்திப்பு பகுதிக்கு எழுந்தருளினர். அங்கு ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ராவணனை வதம் செய்த வேலுக்கு பால்,மஞ்சள், புனித நீராலும் அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து வேல் மற்றும் ராமபிரானுக்கும் சிறப்பு மகா தீப ஆராதனை பூஜை நடந்தது. விழாவில் கோவில் இணை ஆணையர் கல்யாணி,சூப்பிரண்டு ககாரின்ராஜ்,பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராவண சம்ஹாரத்தை கண்டுகளித்தனர்.

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 1 மணிக்கு தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் இலங்கை மன்னரான விபீஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று ராமேசுவரம் கோவில்நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று வழக்கமான பூஜைக்கு பிறகு காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். தீர்த்தமாடவும் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News