ஆன்மிகம்

சுற்றுலா பயணிகளை கவர்ந்த குறிஞ்சி ஆண்டவர்

Published On 2019-06-08 04:43 GMT   |   Update On 2019-06-08 04:43 GMT
கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்றது குறிஞ்சி ஆண்டவர் கோவில். இந்த கோவிலுக்கு சுற்றுலா பயணிகளே அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.
கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உப கோவிலாக விளங்கும் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை இருக்கும். இங்கு நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த திருவிழாவின் போது கொடைக்கானலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வார்கள். இங்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் பக்தர்களை காட்டிலும் சுற்றுலா பயணிகளே அதிக அளவில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவிலில் சமீபத்தில் நடந்த மலர் வழிபாட்டு விழாவின் போது, குறிஞ்சி ஆண்டவருக்கு லட்சக்கணக்கான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியிருக்கும் குறிஞ்சிஆண்டவரை தரிசிக்க திரளான பக்தர்கள் அப்போது கொடைக்கானலில் குவிந்தனர். 
Tags:    

Similar News