ஆன்மிகம்

திருவலஞ்சுழியில் திருநள்ளாறுக்கு இணையான சனிபகவான்

Published On 2018-01-18 06:26 GMT   |   Update On 2018-01-18 06:26 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீசுவரர் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் திருநள்ளாறுக்கு இணையான சனிபகவான் வீற்றிருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ளது திருவலஞ்சுழி. இங்கு பிரமாண்டமான கபர்தீசுவரர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயத்தில், அதிசய வெள்ளை நிற விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகர் கடல் நுரையால் உருவானது. இதை உருவாக்கியவர் தேவேந்திரன் என்று தல புராணம் சொல்கிறது.

கபர்தீசுவரர் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில், திருநள்ளாறுக்கு இணையான சனிபகவான் வீற்றிருக்கிறார். சனீஸ்வரர் தனி சன்னிதியில் வீற்றிருக்க, சனீஸ்வரருக்கு இடதுபுறம் ஈசன் அருள்கிறார். எனவே இந்த சனிபகவான், திருநள்ளாறுக்கு இணையானவராக போற்றப்படுகிறார்.
Tags:    

Similar News