ஆன்மிகம்

ஜென் கதை: மாறும் செயல்

Published On 2017-08-19 07:31 GMT   |   Update On 2017-08-19 07:31 GMT
ஆன்மிக கதைகளை கேட்பதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். அந்த வகையில் இன்று தன் மனதில் தோன்றுவதை செய்ய வேண்டும் என்பதை விளக்கும் ஆன்மிககதையை பார்க்கலாம்.
அது ஒரு புகழ்பெற்ற மடாலயம். அதன் குருவாக இருந்தவர் இறந்ததை அடுத்து, மற்றொருவர் குருவாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதும் அங்கு இருந்த எல்லா முறைகளையும் மாற்றி அமைத்தார். மடாலயத்தில் இருந்த சீடர்கள் அனைவரும், ‘இவர், அவர் போல் இல்லை’ என்று பழைய குருவோடு ஒப்பிட்டு பேசத் தொடங்கினார்கள்.

அதில் ஒருவர் புதிய குருவிடம் சென்று, ‘நீங்கள் பழைய குருவைப் போல் இல்லை என்று பலரும் சொல்கிறார்கள். நீங்கள் பழைய குருவைப் போன்றவர்தானா?’ என்றார்.

அதற்கு குரு ‘ஆமாம்’ என்றார்.

கேள்வி கேட்டவர் வியந்து போனார். ‘எப்படி’ என்று கேட்டார்.

உடனே புதிய குரு, ‘அவர் யாரையும் பின்பற்றியதில்லை. நானும் அப்படியே.. அவர் தன் மனதில் தோன்றியதைச் செய்தார். நானும் கூட அதையே செய்கிறேன்’ என்றார்.

கேள்வி கேட்டவர் மவுனமானார்.
Tags:    

Similar News