ஆன்மிகம்

கிருஷ்ணரை நம்பினால் வெற்றி

Published On 2017-08-14 08:55 GMT   |   Update On 2017-08-14 08:55 GMT
மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.
துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர் களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார்.

என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன். பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள்.

தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேளை, “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்” என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன் கவுரவர்களை ஜெயித்து இருப்பார்.

இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, கண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று அழைத்தாள். அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது.

அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம். கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.
Tags:    

Similar News