ஆன்மிகம்

ஆகஸ்டு 29-ந்தேதி கொண்டாடப்படும் ராதாஷ்டமி

Published On 2017-08-14 06:06 GMT   |   Update On 2017-08-14 06:06 GMT
கிருஷ்ணர் பிறந்த அஷ்டமிக்கு அடுத்த வளர்பிறை அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில் உதித்தவள் ராதை. அதை ராதாஷ்டமி என்று வட நாட்டில் கொண்டாடுவார்கள்.
கிருஷ்ணர் பிறந்த அஷ்டமிக்கு அடுத்த வளர்பிறை அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில் உதித்தவள் ராதை. அதை ராதாஷ்டமி என்று வட நாட்டில் கொண்டாடுவார்கள். (இவ்வருடம் 29.8.2017).

தமிழகத்தில் பிரதானமான ஆலயங்களில் ராதையைக் காண முடியாது. ருக்மினி, சத்யபாமா, கோதை ஆண்டாள் ஆகியோரே இருப்பர். ஆனால் வட நாட்டு கண்ணன் ஆலயங்களில் ராதையே பிரதானம்.

கிருஷ்ணரைப் பாடிய சங்கீதப் பிதாமகர் புரந்தரதாசர் ராதையைப் பாடவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களிலும் ராதையைக் காணமாட்டோம். ஸ்ரீமத் பாகவதமே ராதையை சிந்திக்கவில்லை. ஆனால் ராதாகிருஷ்ணன், ராதா மாதவன் என்று பல பெயர்களில் ராதையை நினைக்கிறோம்.
Tags:    

Similar News