ஆன்மிகம்

திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

Published On 2017-08-14 05:11 GMT   |   Update On 2017-08-14 05:11 GMT
காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசாமி கோவிலில் கடந்த 2 தினங்களாக ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசாமி கோவில் உள்ளது. இங்கு சனிபகவான், தனியாக சன்னதி கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

சனிதோஷ நிவர்த்திக்கு உலகளவில் பிரசித்தி பெற்று விளங்கும் இத்தலத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து நளதீர்த்தத்தில் புனித நீராடி தரிசனம் செய்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமின்றி விடுமுறை தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

ஆடி மாத 4-வது மற்றும் கடைசி சனிக்கிழமையான நேற்று முன்தினமும், ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து நளதீர்த்தத்திற்கு சென்று புனித நீராடி தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவிலுக்கு சென்று பகவானுக்கு திலதீபம் ஏற்றி வழிபட்டனர்.
Tags:    

Similar News