ஆன்மிகம்

நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இன்று சப்த கருட சேவை

Published On 2017-07-27 04:10 GMT   |   Update On 2017-07-27 04:11 GMT
நித்யகல்யாணபெருமாள் கோவிலில் இன்று கருடசேவையில் காட்சி அளிக்கும் பெருமாள்களை தரிசிப்பதன் மூலம் நாக தோஷம், திருமணத் தடைகள் அகலும் என்று கூறப்படுகிறது.
காரைக்கால் நித்யகல்யாணபெருமாள் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) சப்தகருட சேவை நடைபெறுகிறது. இதனையொட்டி காரைக்கால் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலுக்கு பெருமாள்கள் எழுந்தருளுகின்றனர்.

காலை 10 மணியளவில் ஏழு பெருமாள்களுக்கும் ஒருசேர சிறப்பு திருமஞ்சனம் செய்து தீபாராதனை காட்டப்படுகிறது. இரவு 7 மணியளவில் சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் ஏழு பெருமாள்களும் கருடசேவையில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து ஏழு பெருமாள்களுக்கும் ஒருசேர தீபாராதனை காட்டப்பட்டதும் ஏழுபெருமாள்களும் பொதுஜனசேவை புரிகின்றனர்.

அதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஏழு பெருமாள்களும் திருவீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில்கள் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தேவஸ்தான தனிஅதிகாரி ஆசைத்தம்பி மற்றும் நித்யகல்யாணப்பெருமாள் பக்தஜன சபாவினர் சிறப்பான முறையில் செய்துள்ளனர். வியாழக் கிழமையுடன் கூடிய பஞ்சமியன்று கருடசேவையில் காட்சி அளிக்கும் பெருமாள்களை தரிசிப்பதன் மூலம் நாக தோஷம், புத்திரப்பேறின்மை மற்றும் திருமணத் தடைகள் அகலும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News