ஆன்மிகம்

நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவில் தேரோட்டம்

Published On 2017-04-25 05:24 GMT   |   Update On 2017-04-25 05:24 GMT
நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவில் திருவிழாவின் இறுதி நாளான நேற்று பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு தொடர்ந்து 2 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
உடையப்பன்குடியிருப்பு , நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. விழா நாட்களில் பணிவிடை, தோணிப்பு ஏடு வாசித்தல், உச்சிப்படிப்பு, சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடந்தது.

விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு தொடர்ந்து 2 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

Similar News