ஆன்மிகம்
சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2017-04-13 04:59 GMT   |   Update On 2017-04-13 04:59 GMT
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு சாரங்கபாணி பெருமாளுடன், கோமளவல்லி தாயார் அருள்பாலித்து வருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து கண்ணாடி கமல வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட அலங்கார வாகனங்களில் கோமளவல்லி தாயார் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சக்கரபாணிசாமி, சாரங்கபாணி சாமியுடன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பெருமாள்-தாயார் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



விழாவில் நேற்றுமுன்தினம் இரவு சாரங்கபாணி பெருமாள்-கோமளவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோமளவல்லி தாயார் தேசிகர் சன்னதி எதிரே எழுந்தருளினார். இதையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாரங்கபாணி-கோமளவல்லி தாயார் திருக்கல்யாணம் நடை பெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News