ஆன்மிகம்

மைசூரு அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2017-04-07 10:27 GMT   |   Update On 2017-04-07 10:27 GMT
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவிலின் தேரோட்டம் இன்று காலை நடந்தது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் புகழ்பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் தேரோட்டம் இன்று காலை நடந்தது. 60 அடி உயர தேரில் நஞ்சுண்டேஸ்வரர் வலம் வந்தார்.

இந்த தேரை தொடர்ந்து மேலும் 4 சிறிய தேர்கள் வலம் வந்தன. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் பெரிய தேர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேரோட்டத்தையொட்டி நேற்றிரவே பக்தர்கள் குவிந்தனர்.

இன்று காலை 5 மணிமுதல் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். தேர் கோவிலைச் சுற்றி வலம் வந்து நிலைநிறுத்தப்பட்டது.

தேர் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Similar News