ஆன்மிகம்

வெள்ளலூர் பெருமாள் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை 5-ம்தேதி நடக்கிறது

Published On 2017-04-03 05:50 GMT   |   Update On 2017-04-03 05:50 GMT
கோவையை அடுத்த வெள்ளலூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபூமிநீளா நாயகி சமேத கரி வரதராஜபெருமாள் கோவிலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ராமநவமி சிறப்பு பூஜை நடக்கிறது.
கோவையை அடுத்த வெள்ளலூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபூமிநீளா நாயகி சமேத கரி வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ராமநவமி சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை, காலை 7.40 மணிக்கு அபிஷேகம், காலை 9 மணிக்கு அலங்கார பூஜை நடைபெறும்.

பின்னர் வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, துளசி மாலை, வடை மாலை அலங்காரம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Similar News