ஆன்மிகம்

ஏழைப்பெண் கட்டிய படவி லிங்கம்

Published On 2017-03-27 09:58 GMT   |   Update On 2017-03-27 09:58 GMT
கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் ஹம்பி என்ற இடத்தில் படவி லிங்கத்தை ஈசனின் மேல் மிகுந்த பக்தி கொண்ட ஏழைப் பெண் ஒருத்தி கட்டியிருப்பது சிறப்பானதாகும்.
கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி என்ற இடம் இருக்கிறது. இங்கு கிருஷ்ணதேவராயரின் ஆட்சியில், அவரின் நேரடிப் பார்வையில் பல கோவில் கட்டப்பட்டன. மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த இடத்தில் ‘படவி லிங்கம்’ என்ற சிவலிங்க சன்னிதி ஒன்று உள்ளது.

இந்த லிங்கத்தை ஈசனின் மேல் மிகுந்த பக்தி கொண்ட ஏழைப் பெண் ஒருத்தி கட்டியிருப்பது சிறப்பானதாகும். அந்தப் பெண் கூலி வேலை செய்தும், மற்றவர்களிடம் பொருளை அன்பளிப்பாகவோ, யாசகமாகவோ பெற்றும் இந்த லிங்க ஆலயத்தை கட்டி முடித்ததாக தல வரலாறு கூறுகிறது.



ஹம்பியில் உள்ள லிங்கங்களுள் இதுதான் அளவில் மிகப்பெரியது.

இந்த லிங்கத்தின் கீழ் பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. லிங்கம் உள்ள அறை வழியாக ஒரு வாய்க்கால் செல்வதால், எப்போதும் இந்த இடத்தில் தண்ணீர் சூழ்ந்திருக்கும்.

Similar News