ஆன்மிகம்

கும்பகோணம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2017-03-27 03:25 GMT   |   Update On 2017-03-27 03:26 GMT
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செக்கடி தெரு, வீரபத்திரர் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Similar News