ஆன்மிகம்

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

Published On 2017-03-23 08:51 GMT   |   Update On 2017-03-23 08:51 GMT
திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாளான இன்று காலை உற்சவர் தீர்த்தீஸ்வரர் அம்ச வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆரா தனையும் செய்யப்பட்டு பூத வாகனம், நாக வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ராவணேஸ்வர வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 28-ந் தேதி தேரோட்டமும் மறுநாள் 29 தேதி இரவு தீர்த்தீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

Similar News