ஆன்மிகம்

அன்பில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது

Published On 2017-03-22 06:06 GMT   |   Update On 2017-03-22 06:06 GMT
லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலின் மாசிப்பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாக்களை தொடர்ந்து இக்கோவிலிலும் விழாக்கள் நடைபெறும்.

இதன்படி இக்கோவிலின் மாசிப்பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூக்கள் காணிக்கையாக கொண்டு வரப்பட்டு அன்பில் சுந்தரராஜபெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரத்தினவேல் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அன்பில் மாரியம்மனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் விடிய, விடிய பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். இதைத்தொடர்ந்து அம்மன் 15 நாட்கள் பக்தர்களை காக்க பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வதாக ஐதீகம். இந்நாட்களில் அம்மனுக்கு நெய்வேத்தியமாக துள்ளுமாவு, இளநீர், பானகம் ஆகியவை மட்டுமே படைக்கப்படும். இக்கோவிலில் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது.

Similar News