ஆன்மிகம்

தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விழா கொடியேற்றம் நாளை நடக்கிறது

Published On 2017-03-22 05:35 GMT   |   Update On 2017-03-22 05:35 GMT
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையில் அமைந்துள்ள தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையில் அமைந்துள்ள தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) காலை 7.15 மணி முதல் 8.15 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10 நாட்கள் உற்சவமும், வருகிற 1-ந் தேதி மாலை 6 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.



வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருஷாபிசேகமும், தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி திருக்கோவில் வலம் வரும் நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Similar News