ஆன்மிகம்

ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-03-17 08:01 GMT   |   Update On 2017-03-17 08:01 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுந்தம் என அழைக்கப்படும் இக்கோவிலில் வெங்கடாஜலபதி அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத் துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்துக்கு எழுந்தருளி அருள் பாலித்தார். அதைதொடர்ந்து கொடியேற்றம் நடை பெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதை யடுத்து இந்திரவிமானத்தில் பெருமாள்-தாயார் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Similar News