ஆன்மிகம்

ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2017-03-07 04:43 GMT   |   Update On 2017-03-07 04:43 GMT
ஓமலூர் கோட்டையில் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றங்கரையில் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா பூசாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஓமலூர் கோட்டையில் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றங்கரையில் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா பூசாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி சக்தி கரகமும், பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்துதல், அலகு குத்தி கார் இழுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் விழாகுழுவினர் செய்து வருகிறார்கள்.

Similar News