ஆன்மிகம்
ஐயப்பன் கோவிலில் சிவாச்சாரியார்கள் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருணஜெபம் நடத்திய போது எடுத்த படம்.

அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வருண ஜெபம்

Published On 2017-02-27 06:11 GMT   |   Update On 2017-02-27 06:11 GMT
அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில், அணைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்ப வேண்டி சிறப்பு வருண ஜெபம் நடைபெற்றது.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டு அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் வறண்டு போய் உள்ளன. இந்தநிலை மாறி நல்ல மழை பெய்து அணைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிம் தண்ணீர் நிரம்ப வேண்டி அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வருண ஜெபம் நடைபெற்றது. அதில் யாகசாலை போன்று அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்த்தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு, அதில் சிவாச்சாரியார்கள் அமர்ந்து வருண ஜெப மத்திரங்களை உச்சரித்தனர்.

தொடர்ந்து கோவிலில் மழைக்காக சிறப்பு யாகபூஜைகளும் நடந்தன. இதில் விவசாயிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐயப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன், அலங்காநல்லூர் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

மேலும் கோவிலில் உள்ள ஹயக்ரீவர், சரஸ்வதி சன்னதிகளில் 10, 12-ம் வகுப்புகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் வருகிற அரசுப்பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற வேண்டியும், மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற வேண்டியும், சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

இதில் தெய்வங்களுக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், புஷ்பம், கலச தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டு, புத்தகம், பேனா வழங்கப்பட்டது.

Similar News