ஆன்மிகம்
பழனி மலைக்கோவிலில் எடப்பாடி பக்தர்களுக்காக பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடப்பதை படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கியது

Published On 2017-02-16 03:13 GMT   |   Update On 2017-02-16 03:13 GMT
பழனி மலைக்கோவிலில் எடப்பாடி பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் நேற்றே மலைக்கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியை தொடங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந் தேதி நிறைவடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழாவின் போது எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல காவடி குழுவினர் பாதயாத்திரையாக பழனிக்கு வருவது வழக்கம்.

அதன்படி கடந்த 8-ந்தேதி பழைய எடப்பாடி செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து பழனி நோக்கி எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல காவடி குழுவினர் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

பழனியை அடுத்த மானூர் சண்முக நதியில் இன்று (வியாழக்கிழமை) காலை மகாபூஜை நடத்தி, நண்பகலில் காவடிகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு எடப்பாடி பக்தர்கள் வருகின்றனர். எடப்பாடி காவடிக்குழுவில் வரும் பக்தர்களுக்கு சுமார் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் நேற்றே மலைக்கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியை தொடங்கினர்.

Similar News