ஆன்மிகம்

மணமேடை உணர்த்தும் தத்துவம்

Published On 2017-02-13 08:23 GMT   |   Update On 2017-02-13 08:23 GMT
மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மணக்கோலம் காணும் மணமக்களை, மண மேடையில் ஏறி நின்று தாலிகட்டச் சொல்வர். அந்த மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். ஆலயத்தை வலம் வருவது போல, மணப்பந்தலை ஏன் வலம் வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மணப்பந்தலில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும். பந்தலில் ஊன்றப்பட்டிருக்கும் நான்கு கால்களும், நான்கு வேதங்களை குறிக்கின்றன. திருமணம் அக்னி சாட்சியாகவும், விக்னேஷ்வரர் சாட்சியாகவும் நடைபெறுகிறது. அரசன் முன்னிலையில் திருமணம் நடைபெறுவதாக, அரசன் ஆணைக்கால் என்று அரசானிக்கால் வைக்கப்படுகிறது.

அனைத்து செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக குபேரனுக்குரிய நவதானியம் வைக்கப்பட்டுள்ளது. மணப்பந்தலை வலம் வரும் பொழுது தெய்வத்தை (திருவிளக்கு), அக்னியை (மரம்) வலம் வந்து அவற்றின் அருளையும் நாம் பெறுகின்றோம்.

Similar News