ஆன்மிகம்

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2017-01-22 08:59 GMT   |   Update On 2017-01-22 08:59 GMT
கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
புன்னம்சத்திரம் புன்னைவன நாதர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், உள்ளிட்ட 18 திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனாக தேங்காய், நீர்பூசணிக்காய்களில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

பின்னர் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர். விழாஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதே போல் நத்தமேடு சிவன்கோவிலில் உள்ள காலபைரவருக்கும், நன் செய்புகழூர் மேக பாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கும், திருக் காடுதுறையில் உள்ள மாதேஸ்வரன் உடன்உறை மாதேஸ்வரி கோவிலில் உள்ள கால பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது. இதில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு காலபைரவரை தரிசனம் செய்தனர்.

Similar News