ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைப்பு: சாவி மேல்சாந்தியிடம் ஒப்படைப்பு

Published On 2017-01-21 02:52 GMT   |   Update On 2017-01-21 02:52 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெற்றதையடுத்து நேற்று பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெற்றதையடுத்து நேற்று பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்பத்தின் பிரதிநிதி பி.ஜி.சசிகுமார வர்மா சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நடை அடைக்கப்பட்டு கோவில் சாவி ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பாரம்பரிய முறைப்படி கோவில் சாவியினை மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியிடம் சசிகுமார வர்மா ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து, சன்னிதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த திருவாபரணங்கள் பந்தளம் புறப்பட்டது.

பின்னர் அடுத்த மண்டல பூஜை வரையிலான செலவுகளுக்கான தொகையினை கோவில் நிர்வாக அதிகாரியிடம் ராஜ பிரதிநிதி வழங்கினார். பின்னர் கோவில் பாரம்பரிய முறைப்படி கடந்த ஆண்டின் வருமான விகிதத்தை கோவில் நிர்வாக அதிகாரி சசிகுமார வர்மாவிடம் வழங்கினார்.

Similar News