ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பனுக்கு கனிகள், தேனை காணிக்கையாக செலுத்தி காட்டுவாசி மக்கள் சாமி தரிசனம்

Published On 2016-12-09 03:19 GMT   |   Update On 2016-12-09 03:20 GMT
சபரிமலை ஐயப்பனுக்கு கனிகள், தேனை காணிக்கையாக செலுத்தி காட்டுவாசி மக்கள் தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
திருவனந்தபுரம் மாவட்டம், அகஸ்தியர் கூடம் மலை மற்றும் கோட்டூர் கிராமத்தில் ஏராளமான காட்டுவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு குழுவாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.அப்போது அவர்கள் ஐயப்பனுக்கு காட்டு தேன், காட்டு கனிகள் உட்பட மலைகளில் விளையும் பொருட்களை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

அதன்படி நேற்று அகஸ்தியர் கூடம் மற்றும் கோட்டூர் கிராமத்தில் இருந்து சபரி மலைக்கு 101 பேர் அடங்கிய பக்தர்கள் வந்தனர். அவர்கள் மலைகளில் சேகரித்த காட்டு தேன், வாழைக்குலைகள் மற்றும் காட்டு கனிகளை காணிக்கையாக செலுத்தி ஐயப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

முன்னதாக கோட்டூரில் இருந்து வாகனம் மூலம் பம்பை வந்த அவர்கள் வரும் வழியில், கொட்டாரக்கரை கணபதி கோவில், பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில், நிலக்கல் மகாதேவர் கோவில் உட்பட முக்கிய கோவில்களில் தரிசனம் செய்தனர்.

Similar News