ஆன்மிகம்

சரக்கல்விளை பெருமாள்சாமி கோவில் கொடை விழா

Published On 2016-12-02 06:55 GMT   |   Update On 2016-12-02 06:55 GMT
நாகர்கோவில் அருகே சரக்கல்விளை, அரசடி பெருமாள்சாமி கோவில் கொடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் அருகே சரக்கல்விளை, அரசடி பெருமாள்சாமி கோவில் கொடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் இன்று காலை 5 மணிக்கு கணபதிஹோமம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது.

3-ந் தேதி காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு பெருமாள்சாமி காட்சி தருதல், மாலை 3 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு பத்திரகாளியம்மன் காட்சி தருதல் போன்றவை நடக்கிறது. திருவிழா இறுதி நாளான 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை, காலை 7 மணிக்கு பால் பாயாசம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Similar News