ஆன்மிகம்

சாமிதோப்பில் இருந்து அரசம்பதிக்கு முந்திரிப்பதம் ஊர்வலம்

Published On 2016-11-29 05:57 GMT   |   Update On 2016-11-29 05:57 GMT
சாமிதோப்பில் இருந்து அரசம்பதிக்கு முந்திரிப்பதம் வரை காவி உடை அணிந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பொற்றையடி அருகே உள்ள அரசம்பதியில் திருஏடுவாசிப்பு திருவிழா 17 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெற்றது. விழாவையொட்டி சாமிதோப்பில் இருந்து அரசம்பதிக்கு முந்திரிப்பதம் ஊர்வலம் நடைபெற்றது.

சாமிதோப்பில் முந்திரிப் பதம் எடுத்து பெண்கள் சுருள் தட்டு ஏந்தி முன்செல்ல மேள தாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு அரசம்பதி நிர்வாகி சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் காவி உடை அணிந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News