ஆன்மிகம்

குபேரனுக்கு செல்வம் அருளிய சிவபெருமான்

Published On 2016-10-25 06:41 GMT   |   Update On 2016-10-25 06:41 GMT
குபேரனுக்கு சிவபெருமான் சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளை வழங்கி அருளினார்.
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தஞ்சபுரீஸ்வரர் கோவில். ஒரு முறை ராவணன், குபேரனிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு விரட்டி அடித்தான். இதையடுத்து வடதிசை நோக்கிச் சென்ற குபேரன், சசிவனம் என்னும் வன்னிக் காட்டுப் பகுதிக்கு வந்தான்.

தேவர்களாலும், முனிவர்களாலும் ‘விருபாசுர சதுர்வேதி மங்கலம்’ என்று போற்றப்படும் இந்த இடத்தில் அமலேஸ்வரர் என்ற பெயருடன் சுயம்புவாக இருந்தார் சிவபெருமான். அந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கிய குபேரன், அங்கிருந்து இறைவனுக்கு தொண்டு செய்து வந்தான்.

அவனது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், உமாதேவியுடன் மேற்கு நோக்கியபடி குபேரனுக்கு காட்சி அளித்தார். மேலும் அவனுக்கு சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளை வழங்கி அருளினார். இதனால் இந்த திருத்தலம் சித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஈசனிடம் இருந்து பல வரங்களை பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கி ஆட்சி செய்யத் தொடங்கினான். மேலும் தான் செல்வம் பெற்ற இந்த தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு அருளும்படி சிவபெருமானை வேண்டினான்.

Similar News