ஆன்மிகம்

திருப்பதி பெருமாளை நினைத்தாலே பாவம் தீரும்

Published On 2016-10-22 06:07 GMT   |   Update On 2016-10-22 06:07 GMT
திருப்பதி பெருமாளை மனதால் நினைத்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம். எனவே சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வளம் பெறுவோம்.
கலியுகத்தில் நல்லவர்களைக் காக்க, வைகுண்டத்தில் வீற்றிருக்கும் விஷ்ணு, வெங்கடாஜல பதியாக, புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திர நன்னாளில் அவதரித்தார்.

தன்னை சரணடைந்தவர்களை கையால் அணைத்து ஆதரிப்பதை பெருமாளின் இடது தொடையில் இருக்கும் இடது கை உணர்த்துகிறது. பன்னிரு ஆழ்வார்களும், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்களும் வெங்கடாஜலபதியைச் சரணடைந்து வாழ்வில் நற்கதி அடைந்தனர்.

திருப்பதியை “வேங்கடம்‘ என்றும் அழைப்பர். “வேங்கடம்’ என்றால் “பாவம் பொசுங்கும் இடம்‘ என்று பொருள். புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை மனதால் நினைத்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம்.

குறிப்பாக சந்திரதோஷத்தால் திருமணத்தடை, பணப்பிரச்சனை, நோயால் அவதி, கல்வித்தடை உள்ளவர்கள், திருவோண விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் பிரச்னை தீர்ந்து நன்மை உண்டாகும். புரட்டாசியில், சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதனும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்தவை. புண்ணியம் மிக்க புரட்டாசி சனியன்று ஏழுமலையானைச் சரணடைந்து புண்ணியம் பெறுவோம்.

Similar News