ஆன்மிகம்

கல்யாண முகூர்த்தம் குறிக்கும் போது கவனிக்க வேண்டியவை

Published On 2016-10-18 07:22 GMT   |   Update On 2016-10-18 07:22 GMT
கல்யாண முகூர்த்த நாள் மற்றும் பிற விஷயங்களை செய்யும் போது சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் திருமணப் பேச்சு நடத்துகின்ற பொழுது, முதலில் ஜாதகத்தைக் கொடுத்து பொருந்துகின்றதா? என்று பார்க்க வேண்டும். நல்ல பொருத்தமாக இருந்தால் மணமகளுக்கு மணமகனைப் பிடித்திருக்கிறதா?, மணமகனுக்கு மணமகளைப் பிடித்திருக்கிறதா? என்றும் கேட்டு முடிவு செய்து அதன்பிறகு நிச்சயதார்த்தம் செய்ய முடிவெடுப்பர்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முகூர்த்த ஓலை எழுதுவர். மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறிக்கும் போது அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்கள். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகின்ற பொழுது அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய பிறகே திருமண ஓலை எழுத வேண்டும்.

பெண்ணிற்குப் பொருத்தமான நாளாகவும், மாதவிலக்கு இல்லாத நாளாகவும் தேர்ந்தெடுத்து அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம், அனைத்தும் பார்த்துத் திருமண ஓலை எழுத வேண்டும். அதை வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து, விநாயகர் படத்தின் முன்னால் நின்று சம்பந்தம் செய்து கொள்பவர்கள் தட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னார் மகனுக்கு இன்னார் மகளைத் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப் பெற்றிருக்கிறது என்று பூஜை அறையிலுள்ள தெய்வப் படத்தின் முன்னால் வாசித்துவிட்டு சம்பந்திகள் தட்டு மாற்றிக் கொள்வது உகந்தது.

Similar News