ஆன்மிகம்

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

Published On 2016-10-17 05:44 GMT   |   Update On 2016-10-17 05:44 GMT
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா நேற்று காலை தொடங்கி வரும் 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா நேற்று காலை தொடங்கி வரும் 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்ட சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று. பின்னர் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, நகர செயலாளர் விஜயபாண்டியன், கயத்தார் கணபதிபாண்டியன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், நகர்மன்ற உறுப்பினர் கலைவாணி, வேலுமணி, பாலமுருகன், மாதவராஜ், ஆரோக்கியராஜ், வணிக வைசிய சங்க தலைவர் காளியப்பன், செயலாளர் பழனிகுமார் மற்றும் அனைத்து மண்டகபடிதாரர்களும் கலந்து கொண்டனர்.

திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர் சார்பில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் ரத வீதி உலா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழச்சிகளான திருத்தேரேட்டம் வரும் 24-ந்தேதியும், திருக்கல்யாண நிகழ்ச்சி 27-ந்தேதியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News