ஆன்மிகம்

ஆரணி கோவிலில் நவராத்திரி விழா: 20 லட்சம் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2016-10-01 09:45 GMT   |   Update On 2016-10-01 09:45 GMT
ஆரணி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 20 லட்சம் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆரணி சைதாப்பேட்டை யில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள நரசிம்ம பெருமாளுக்கு நவராத்திரி விழா நடந்தது.

இதையொட்டி மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் நரசிம்ம பெருமாள் எழுந்தருளி செண்டை மேளம், இன்னிசை வாத்தியங்கள் முழுங்க வீதி உலா வந்தார்.

காலம் காலமாக நடைபெறும் முறைப்படி பக்தரின் வீட்டிலிருந்து நரசிம்மர் சிரசு உருவத்தை கொண்டு வந்து புஷ்ப பல்லக்கில் அமர்த்தினர். பின்னர் சைதாப்பேட்டை, நாடகபேட்டை சாலை, கார்த்திகேயன் சாலை, மேட்டுத்தெரு ஆகிய முக்கிய வீதிகளில் புஷ்ப பல்லக்கு வீதி உலா வந்தது.

திருமணமாத பெண்கள் மற்றும் குழந்தை வரம் இல்லாத தம்பதியினர் வேண்டுதல் நிறைவேறியதையடுத்தும், மகாளய அமாவாசையை யொட்டியும் தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

Similar News