ஆன்மிகம்

கொளத்தூர் நவராத்திரி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடக்கம்

Published On 2016-09-30 09:28 GMT   |   Update On 2016-09-30 09:28 GMT
கொளத்தூர் நவராத்திரி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா மற்றும் 3000 சிலைகள் உள்ளடக்கிய கொலு கண்காட்சி நாளை தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கிறது.
சென்னை கொளத்தூரை அடுத்த G.K.M. காலணி 36-வது தெருவில் அமைந்துள்ளது நவராத்திரி திருக்கோவில். இந்த கோவிலில் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசக்தி, ஸ்ரீசரஸ்வதி என முப்பெரும் தேவியர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

வேறெங்கும் காணக்கிடைக்காத பெரும் பேறாக தமிழகத்தில் சென்னை மாநகரில் நவராத்திரிக்கென்றே பிரத்யேகமாக, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இத்திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழா மற்றும் 3000 சிலைகள் உள்ளடக்கிய கொலு கண்காட்சி 01.10.2016 முதல் 10.10.2016 வரை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் காலையில் 9 மணிக்கு அபிஷேகமும் மாலை 6 மணிக்கு அம்பாளை மிக சிறப்பாக அலங்கரித்து கொலு மண்டபத்தில் எழுந்தருள செய்து தூப தீப ஆராதனைகளும் மாலை 6 மணிக்கு மேல் பல்சுவை கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இந்த நவராத்திரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் அருளாசி வழங்க உள்ளார். 01.10.2016 முதல் 10.10.2016 வரை நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றிட வேண்டுகிறோம்.

மேலும் இந்த கோவிலில் பற்றிய தகவல்கள் அறிய, 9600110939 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

Similar News