ஆன்மிகம்

நாளை ஏழுமலையானை வழிபட தடை இல்லை

Published On 2016-09-30 09:18 GMT   |   Update On 2016-09-30 09:19 GMT
நாளை புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானை வழிபட எந்த விதத்திலும் தடை இல்லை.
ஏழுமலையானை குல தெய்வமாக கருதி வழிபடுபவர்கள் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை மா விளக்கு ஏற்றி சிறப்பாக கொண்டாடுவார்கள். நாளை புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் அந்த மா விளக்கு வழிபாடுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாளைய தினம் அமாவாசைக்கு மறுநாள் என்பதால் பிரதமை திதி வருவதாக கூறி மா விளக்கு வழிபாடு செய்யக் கூடாது என்ற வதந்தி பரவியுள்ளது. இதையடுத்து சிலர் 3-வது சனிக்கிழமை வழிபாட்டை 5-வது சனிக்கிழமைக்கு மாற்றியுள்ளனர்.

இதுபற்றி பிரபல ஜோதிடர் ஆதித்யகுருஜி கூறுகையில், நாளை புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானை வழிபட எந்த விதத்திலும் தடை இல்லை. எனவே 3-வது சனிக்கிழமை மாவிளக்கு ஏற்றும் வழிபாட்டை ஆண்டு தோறும் செய்வது போல வழக்கமாக செய்யலாம் என்றார்.

Similar News