ஆன்மிகம்

லிங்கேஷ்வரி அருள் அம்மன் கோட்டைபதியில் புரட்டாசி திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2016-09-30 07:44 GMT   |   Update On 2016-09-30 07:44 GMT
அந்தேரி லிங்கேஷ்வரி அருள் அம்மன் கோட்டைபதியில் புரட்டாசி திருவிழா இன்று தொடங்குகிறது.
மும்பை அந்தேரி விஜய் நகரில் உள்ள லிங்கேஷ்வரி அருள் அம்மன் கோட்டைபதியில் புரட்டாசி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் நடக்கிறது.

விழாவையொட்டி இன்று அதிகாலை 4.55 மணிக்கு அம்மை அப்பன் அழைப்பு நடந்தது. காலை 6.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. 6.35 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. 8.30 மணிக்கு வீடியோ குறுந்தகட்டை வெளியிட்டனர். நண்பகல் 1.05 மணிக்கு அன்னகஞ்சி வழங்கப்பட்டது.

பின்னர் விழா நாட்களில் கோட்டைபதியில் அம்மனுக்கு அபிஷேகம், உச்சி பதிப்பு, உச்சிகால பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 8-ம் நாள் திருவிழா நடக்கும் வருகிற 7-ந் தேதி அன்று மதியம் மஞ்சள் பூ நீராடுதல், அருள் வாக்கு, அலங்கார சிறப்பு பூஜை ஆகியவை நடக்கின்றன. 8-ந் தேதி இரவு லிங்கேஷ்வரி அம்மை அப்பனின் இன்னிசை கச்சேரி நடக்கிறது.

9-ந் தேதி அன்று பிற்பகல் 3.35 மணிக்குகு அம்மை அப்பன் வீதியுலா வருகிறார்கள். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் முளைப்பாரி சுமந்து விஜய் நகர் வழியாக கோட்டைபதியை வந்தடைகிறார்கள்.

பின்னர் இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 

Similar News