ஆன்மிகம்

அபிராமி அந்தாதி தெய்வீக துதி நூல்

Published On 2016-09-24 08:15 GMT   |   Update On 2016-09-24 08:16 GMT
அபிராமி அந்தாதி ஒரு அற்புதமான தெய்வீக துதிநூலாக திகழ்கிறது.
இந்நூலில் அன்னை அபிராமியை யாவரும் வணங்கும் தெய்வமே! என்னைப் பெற்ற தாயே! வேதமாகவும், உபநிடதங்களாகவும் திகழ்பவளே! அருட்செல்வத்தை அள்ளித்தருபவளே! தீவினையாகிய நரகத்தில் விழாதபடி அடியவர்களைக் காப்பவளே! அருள் நிறைந்த திருவடிகளால் அடைக்கலம் தருபவளே! 

மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் வணங்கும் பெருமை பெற்றவளே! உயிர்களின் ஆதாரமே! வஞ்சிக்கொடி போன்றவளே! மனோன்மணித் தாயே! என்று பல விதமாக அபிராமிபட்டர் போற்றியுள்ளார். அபிராமி அந்தாதியை பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வருபவர்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும் என்பது சக்தி உபாசகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 

இந்தப்பாடல்கள் “அபிராமி அந்தாதி” என்ற பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. 

அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் பாடலின் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கிறது. அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.

Similar News