ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காகிதப்பட்டறையில் உறியடி விழா இன்று நடக்கிறது

Published On 2016-08-26 03:33 GMT   |   Update On 2016-08-26 03:33 GMT
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காகிதப்பட்டறையில் உறியடி விழா இன்று நடக்க உள்ளது.
வேலூர்-ஆற்காடு ரோடு காகிதப்பட்டறையில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் பஜனை கோவிலில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று இரவு 12 மணிக்கு கிருஷ்ண பகவான் ஜனனம் வைபவ நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு திருமஞ்சன சேவையும், மாலை 4 மணிக்கு ஸ்ரீகண்ணபிரான் கருட வாகன சேவை, உறியடி, சறுக்கு மரம் ஏறும் திருவிழாவும் விமரிசையாக நடக்க உள்ளது.

இதையொட்டி இன்று மாலை சுவாமி வீதிஉலா நடக்கிறது.

விழாவில், வேலூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சி.கே. தேவேந்திரன், மாநகராட்சி கவுன் சிலர் சி.கே.சிவாஜி, 2-வது மண்டல குழு தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம், கவுன்சிலர் தாமோதரன், மாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

Similar News