ஆன்மிகம்

குளிக்காமல் விபூதி பூசலாமா?

Published On 2016-08-15 06:37 GMT   |   Update On 2016-08-15 06:37 GMT
குளிக்காமல், சுத்தமாக இல்லாமல் விபூதி பூசலாமா என்ற சந்தேகம் அனைவரும் உள்ளது. அதற்கான விடையை கீழே பார்க்கலாம்.
நீராடியபின் விபூதி பூசுவது தான் சரியானமுறை. உடல்நலக்குறைவு, வயோதிகம், ஆபத்து நேர்ந்த காலத்தில் குளிக்காமல் பூசுவதால் தவறில்லை.

உடல் தூய்மையை விட உள்ளத் தூய்மையே முக்கியம் என்றாலும், இதையே காரணம் காட்டி சோம்பலும் எட்டிப் பார்த்து விடும். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.

இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள். எனவே யாராக இருந்தாலும் குளியலுக்கு பிறகே திருநீறு பூச வேண்டும்.


Similar News