ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம்

Published On 2016-06-14 05:42 GMT   |   Update On 2016-06-14 05:42 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று மாலை 2 மணியில் இருந்து மாலை 5 மணிவரை பல வண்ணமலர்களால் வருடாந்திர புஷ்ப யாகம் நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் கடந்த மே மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்கள் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அப்போது விழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருந்ததற்காக, கோவிலில் நேற்று மாலை 2 மணியில் இருந்து மாலை 5 மணிவரை பல வண்ணமலர்களால் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமிக்கு புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடந்தது.

புஷ்ப யாகத்தில் கோவில் துணை அதிகாரி வரலட்சுமி, பூங்கா இலாகா அதிகாரி சீனிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல வண்ணமலர்களை கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கூடைகளில் வைத்து மேள தாளம் முழங்க நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

Similar News