ஆன்மிகம்

வேலூரில் ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்

Published On 2016-04-08 02:04 GMT   |   Update On 2016-04-08 02:05 GMT
வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது. 21-ந் தேதி புஷ்ப பல்லக்கு நடக்கிறது.
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 35-வது பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது.

விழாவை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு செல்லியம்மன் உற்சவமும், 10-ந் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவமும், 11-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றம், அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகியவை நடக்கிறது.

12-ந் தேதி காலை 9 மணிக்கு விநாயகர் சந்திரசேகரர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு அதிகார நந்தி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 13-ந் தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு பூத வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

14-ந் தேதி காலை 9 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு நாக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 15-ந் தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர் சந்திரசேகரர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 7.30 மணிக்கு ரிஷப வாக னத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

16-ந் தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர் சந்திரசேகரர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 63 நாயன்மார்கள் உற்சவமும், 17-ந் தேதி காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது.

18-ந் தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர் சந்திரசேகரர் புறப்பாடும், பிச்சாண்டவர் உற்சவமும், மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 19-ந் தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர் சந்திரசேகரர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு புருஷாமிருக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

20-ந் தேதி காலை 8.30 மணிக்கு நடராஜர் அபிஷேகம், தீர்த்தவாரி, மாலை 4.30 மணிக்கு கொடியிறக்கமும், ராவணேஸ்வரர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

21-ந் தேதி காலை 9 மணிக்கு கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதலும், இரவு 8.30 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம், மின்விளக்கு அலங்காரத்தில் ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

22-ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவமும், 23-ந் தேதி மாலை 6 மணிக்கு உற்சவசாந்தி அபிஷேகமும் நடக்கிறது.

ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News