ஆன்மிகம்

திருமணத்தடை நீக்கும் பொன்னூற்று அம்மன்

Published On 2016-12-10 05:54 GMT   |   Update On 2016-12-10 05:54 GMT
திருமணத் தடை, குழந்தை இல்லாதவர்கள் கோயம்புத்தூர் குருடிமலையில் உள்ள பொன்னூற்று அம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.
கோயம்புத்தூரை அடுத்த நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வரப்பாளையம் கிராமத்தை அடுத்தாற்போல் குருடிமலை உள்ளது. இந்த மலையில் பிரசித்திபெற்ற பொன்னூற்று அம்மன் கோவில் இருக்கிறது.

இங்குள்ள அம்மனின் காலடியில் வற்றாத ஊற்று உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஊற்று மூலம் வரும் தண்ணீர் அதிகமாகி, அம்மன் வீற்றிருக்கும் குகையையே மூழ்கச் செய்துவிடும்.

இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், 48 நாட்கள் இந்த ஆலயம் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றால் திருமணத் தடை நீங்கும்.

குழந்தை இல்லாதவர்கள், தொட்டில் கட்டி 48 நாட்கள் பூஜை செய்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Similar News