ஆன்மிகம்

கடன் மற்றும் நோய் தீர்க்கும் மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர்

Published On 2016-09-14 05:41 GMT   |   Update On 2016-09-14 05:41 GMT
விசாலாட்சி விநாயகரை வழிபட்டால் சாபங்கள், தீராத நோய்கள், கடன் தொல்லை, திருமண தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பொதுவாக ஆற்றாங்கரை, குளக்கரை, மரத்தடிகளில் தான் விநாயகர் காட்சி அளிப்பார். ஆனால் மதுரை அருகே உள்ள திருப்புவனத்தில் வைகை ஆற்று பாலத்தை கடந்து சென்றால் விசாலாட்சி ஜோதிட மந்த்ராலயத்தில் திசை மாறி தெற்குமுக விசாலாட்சி விநாயகர் அருள்பாலித்து வருகிறார். 

இங்கு எல்லா நாட்களிலும் மற்றும் சங்கடஹர சதுர்த்தி அன்றும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தந்து 7 பெரிய தேங்காய் மாலையாக சமர்ப்பித்து 7 லட்டு, 7 எலுமிச்சம் பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

இதனால் முன்னோர் சாபங்கள், தீராத நோய்கள் நீங்கி தொழில் வளம் பெருகி கடன் தொல்லை தீர்ந்து திருமண தடையும் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

தரிசன தொடர்புக்கு அறங்காவலர் கரு.கருப்பையா - செல்:94431-65504.

Similar News