ஆன்மிகம்

திருமண தடை நீக்கும் படவேடு ரேணுகாம்பாள்

Published On 2016-09-07 06:31 GMT   |   Update On 2016-09-07 06:31 GMT
அன்னை ரேணுகாதேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பாள்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேட்டில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் திருக்கோவில் சக்தி தலங்களில் ஒன்றாகும்.
கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களுடனும் எழுந்தருளியுள்ளார்கள்.

அன்னை ரேணுகாதேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பதுடன், அம்மை, பில்லி, சூன்யம் போன்ற பிணிகளை நீக்கி அனைத்து செல்வங்களையும் அளித்து வருகிறாள். திருமணம் கைகூடவும், குழந்தை வரம் வேண்டுவோர் உரிய பலனை பெற்றுச் செல்வதும் கண்கூடாக நடந்து வருகிறது.

இத்திருக்கோயிலில் ஆகம விதிப்படி தினசரி மூன்று கால பூஜை நடைபெறுகிறது. பிரதி வருடம் ஆடி மாதத்தில் முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து ஏழு வெள்ளிகளில் ஆடிப்பெருவிழா நடைபெற்று வருகிறது.

Similar News