சினிமா

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்

Published On 2018-09-06 04:47 GMT   |   Update On 2018-09-06 04:47 GMT
கரகாட்டக்காரன், ராஜாதிராஜா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார். #VellaiSubbaiah
ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தால், அலைகள் ஓய்வதில்லை, கோட்டைமாரியம்மன் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் தங்கம், பாசமலர், ஆகிய சின்னத்திரைகளில் புகழ் பெற்றவர் நடிகர் வெள்ளை சுப்பையா (வயது 78). இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி.

கடந்த 5 வருடங்களாக கோவை மாவட்டம் மேட்டுபாளையம் சிவன்புரம் திலகர் வீதியில் வசித்து வந்த இவருக்கு, கடந்த 1 வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 8.30 மணிக்கு இறந்தார்.

வெள்ளை சுப்பையாவின் மனைவி சாவித்திரி. இவர்களது ஒரே மகள் தனலட்சுமி. இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் குவைத்தில் உள்ளார்.



வெள்ளை சுப்பையா 300-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். இவரது நடிப்பை பாராட்டி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கலைச்செல்வன் என்ற விருதினை வழங்கினார்.

வெள்ளை சுப்பையாவின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #VellaiSubbaiah

Tags:    

Similar News