சினிமா செய்திகள்

வம்சி

திருவண்ணாமலையில் வாரிசு பட இயக்குனர் வம்சி சாமி தரிசனம்

Published On 2023-01-29 11:46 GMT   |   Update On 2023-01-29 11:46 GMT
  • விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் வம்சி.
  • திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இயக்குனர் வம்சி சாமி தரிசனம் செய்துள்ளார்.

2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான முன்னா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வம்சி. அதன்பின் பிருந்தாவனம், யுவடு படங்களை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து கார்த்தி, நாக சைத்தன்யா நடிப்பில் தெலுங்கில் ஊப்பிரி என்றும் தமிழில் தோழா என்றும் இயக்கியிருந்தார். தற்போது விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.


வம்சி

இந்நிலையில் இயக்குனர் வம்சி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வம்சி, எல்லாருடைய அன்புக்கும் ரொம்ப நன்றி. வாரிசு படத்திற்காக நீங்க கொடுத்த அன்பு தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கு. நான் இங்க சாமி தரிசனம் பண்ண வந்தேன். தமிழ்நாடு மக்கள் என் மேல் இவ்வளவு அன்பு காட்டியதற்கு ரொம்ப நன்றி என்றார்.

Tags:    

Similar News