சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷ்

பிரபல இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

Update: 2022-05-26 08:23 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்த படத்தில் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தங்கர் பச்சான். இவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்று பெயரிட்டுள்ள இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் டி.வீரசக்தி தயாரிக்கிறார். இதில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகையின் தேர்வு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. 


தங்கர் பச்சான்

‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் மூலம் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ்-தங்கர் பச்சான் கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரமும், கலை இயக்கத்தை முத்துராஜ் தங்கவேல் மேற்கொள்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் 25 முதல் இரு கட்டங்களாக தொடங்குகின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் பிற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News